Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; முக்கிய உடன்பாடுகளுடன் முதற்கட்ட அமர்வு நிறைவு!

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; முக்கிய உடன்பாடுகளுடன் முதற்கட்ட அமர்வு நிறைவு!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை, சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் நகரில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

கடந்த 18ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஆரம்பகட்ட அமைதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, அடுத்த 60 நாட்களுக்குள் முழுமையான இறுதி ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.

அமெரிக்க தரப்பை துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழு வழிநடத்தியதுடன், ஈரான் சார்பில் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி மற்றும் சபாநாயகர் முகமது பாக்கெர் கலிபாஃப் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் முன்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கடுமையான எச்சரிக்கை பதற்றத்தை ஏற்படுத்தியது. லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பை ஈரான் கட்டுப்படுத்தத் தவறினால் புதிய இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரான் பிரதிநிதிகள் தற்காலிகமாக பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியதால் சூழ்நிலை பரபரப்பாக மாறியது. பின்னர் மத்தியஸ்த நாடுகளின் முயற்சியால் இரு தரப்பும் மீண்டும் கலந்துரையாடலுக்கு திரும்பியதுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக தொடர்ந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தப் பங்காற்றின. அமர்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் பல முக்கிய தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான 14 அம்சங்களைக் கொண்ட வழிகாட்டி திட்டத்தை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

மேலும், உலக எரிபொருள் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய தகவல் பரிமாற்ற அமைப்பொன்றை உருவாக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதேபோன்று, லெபனானில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து பதற்றத்தைத் தவிர்க்கும் நோக்கில் புதிய ‘மோதல் தவிர்ப்புப் பிரிவு’ ஒன்றை அமைக்கவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.

இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாகவும் சுமுகமாகவும் முன்னெடுக்கப்படுவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக பாகிஸ்தான் மற்றும் கட்டார் நாடுகள் உறுதியளித்துள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,056 துப்பாக்கிகள், ஆயுதங்கள் மீட்பு
செய்திகள்

கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,056 துப்பாக்கிகள், ஆயுதங்கள் மீட்பு

November 6, 2026
உத்தியோகபூர்வ அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!
அரசியல்

உத்தியோகபூர்வ அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

November 6, 2026
மட்டு கற்பானையில் யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பனம் விதைகள் நடுகை!
செய்திகள்

மட்டு கற்பானையில் யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பனம் விதைகள் நடுகை!

November 6, 2026
மழைக்கு மத்தியிலும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்குத் தயாராகும் மட்டக்களப்பு மக்கள்!
செய்திகள்

மழைக்கு மத்தியிலும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்குத் தயாராகும் மட்டக்களப்பு மக்கள்!

November 6, 2026
எரிபொருள் முறைகேட்டில் சிக்கிய வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநர்; அரசாங்கத்துக்கு பணத்தை மீளச் செலுத்தினார்!
செய்திகள்

எரிபொருள் முறைகேட்டில் சிக்கிய வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநர்; அரசாங்கத்துக்கு பணத்தை மீளச் செலுத்தினார்!

November 6, 2026
மட்டு குளாம்பியாமடு வீதியில் வேன் – கார் நேருக்கு நேர் மோதி விபத்து!
செய்திகள்

மட்டு குளாம்பியாமடு வீதியில் வேன் – கார் நேருக்கு நேர் மோதி விபத்து!

November 6, 2026
Next Post
உலகின் சக்திவாய்ந்த குவாண்டம் கணினியை உருவாக்கும் உத்தரவை பிறப்பித்த ட்ரம்ப்

உலகின் சக்திவாய்ந்த குவாண்டம் கணினியை உருவாக்கும் உத்தரவை பிறப்பித்த ட்ரம்ப்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு