Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும்; நாமல் ராஜபக்ஷ

வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும்; நாமல் ராஜபக்ஷ

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் கைது, விசாரணை மற்றும் நீதிமன்ற விவகாரங்கள் குறித்து நீண்ட விவாதங்களில் ஈடுபடாமல், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவால் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் குடும்பங்கள் கடுமையான பொருளாதாரச் சுமையை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் ஜனாதிபதியிடமிருந்து எதிர்பார்ப்பது வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளுக்கான தீர்வுகளே தவிர, கைது மற்றும் விசாரணைகள் தொடர்பான கருத்துரைகள் அல்ல என்றார்.

விசாரணைகள் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே கருத்து வெளியிடுவதற்காக நாடாளுமன்ற மேடையை பயன்படுத்தக் கூடாது எனக் கூறிய அவர், குற்றச்சாட்டுகள் இருப்பின் அவை சட்டத்தின் அடிப்படையில் சுயாதீனமாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

“சட்டத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எந்தவொரு விசாரணைக்கும் அல்லது சட்ட நடவடிக்கைக்கும் முகங்கொடுக்கத் தயாராக இருக்கிறோம். எதிலிருந்தும் தப்பிச் செல்லும் நோக்கம் எமக்கில்லை,” எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் குடும்பச் செலவின அதிகரிப்பு காரணமாக பெரும்பாலான மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் தொடர்பிலும் ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள போதிலும், அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கைது மற்றும் நீதிமன்ற விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மக்களின் வாழ்க்கைச் செலவு, பொருளாதார சவால்கள் மற்றும் அரசாங்கத்திற்குள் நிலவும் ஊழல் குறித்த கவலைகளுக்கு தீர்வு காண்பதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பாக இருக்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

“நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவிற்கு தீர்வு காண்பதே இன்றைய சூழலில் நாட்டின் மிக அவசரமான தேவையாகும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி
உலக செய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

September 24, 2026
அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!
செய்திகள்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!

September 24, 2026
புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!
செய்திகள்

புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!

September 24, 2026
மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்
செய்திகள்

மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்

September 24, 2026
இந்தியா, சீனா, துருக்கி ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தினால் போர் ஒரு வாரம் கூட நீடிக்காது; செலென்ஸ்கி!
உலக செய்திகள்

இந்தியா, சீனா, துருக்கி ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தினால் போர் ஒரு வாரம் கூட நீடிக்காது; செலென்ஸ்கி!

September 24, 2026
ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி
உலக செய்திகள்

ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி

September 24, 2026
Next Post
பெண் வைத்தியர் கொலை வழக்கு; பொலிஸ் உயர் அதிகாரி கைது; 3 பேருக்கு தடுப்புக் காவல்!

பெண் வைத்தியர் கொலை வழக்கு; பொலிஸ் உயர் அதிகாரி கைது; 3 பேருக்கு தடுப்புக் காவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு