முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கைத்தொழில்மயமாக்கல் வேலைத்திட்டத்தைப் போன்று, இலங்கையில் மின்சார வாகன (EV) உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உள்ளூரில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்துறையை மேம்படுத்துவதுடன், அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








