Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இடிந்து விழுந்த புதுப்பாலம்; தற்காலிக பெய்லி பாலம் அமைக்க நடவடிக்கை!

மட்டக்களப்பில் இடிந்து விழுந்த புதுப்பாலம்; தற்காலிக பெய்லி பாலம் அமைக்க நடவடிக்கை!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் அண்மையில் இடிந்து வீழ்ந்த புதிய பாலத்துக்கு மாற்றாக, தற்காலிக பெய்லி ரக பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இதற்கான கட்டுமானப் பணிகள் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், அவற்றை விரைவாக முன்னெடுக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுமார் 40 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தில் ஏற்பட்டிருந்த வெடிப்புகள் தொடர்பாக ஏற்கனவே தொழில்நுட்ப அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி மாலை பாலத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது.

இதனால் மட்டக்களப்பு நகருக்கான முக்கிய போக்குவரத்து பாதை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிரந்தர புதிய பாலம் அமைக்கப்படும் வரை பொதுமக்களின் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில் தற்காலிக பெய்லி பாலம் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இடிந்து வீழ்ந்த இந்த பாலம், மட்டக்களப்பு நகருக்குள் நுழைவதற்கான முக்கிய இணைப்புப் பாலங்களில் ஒன்றாகும். மேலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, பாடசாலைகள் மற்றும் பல முக்கிய அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் பிரதான போக்குவரத்து வழியாகவும் இந்தப் பாலம் பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாடகைக்கு வீடு வழங்குவோர் அவதானம்!; குற்றச் செயல்கள் இடம்பெற்றால் உரிமையாளர்களுக்கும் சட்ட நடவடிக்கை!
செய்திகள்

வாடகைக்கு வீடு வழங்குவோர் அவதானம்!; குற்றச் செயல்கள் இடம்பெற்றால் உரிமையாளர்களுக்கும் சட்ட நடவடிக்கை!

September 28, 2026
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு
செய்திகள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு

September 28, 2026
அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
செய்திகள்

அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

September 28, 2026
மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!
செய்திகள்

மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

September 28, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
காணொளிகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

September 28, 2026
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!
செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

September 28, 2026
Next Post
“எல்லாமே பொய் குற்றச்சாட்டு போலி குற்றச்சாட்டு”; வாகனத்திற்குள்ளேயிருந்து பேசிய பிள்ளையான்!

"எல்லாமே பொய் குற்றச்சாட்டு போலி குற்றச்சாட்டு"; வாகனத்திற்குள்ளேயிருந்து பேசிய பிள்ளையான்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு