Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாகிஸ்தானில் மேலதிக வகுப்பு கூரை இடிந்து 14 சிறுவர்கள் மரணம்!

பாகிஸ்தானில் மேலதிக வகுப்பு கூரை இடிந்து 14 சிறுவர்கள் மரணம்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு மையம் ஒன்றில் ஏற்பட்டவிபத்தில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வகுப்பில் பாடம் கற்றுக்கொண்டிருந்த வேளையில், கட்டிடத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் உள்ளனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆரம்ப விசாரணைகளின்படி, விபத்துக்குள்ளான கட்டிடத்தின் கூரை நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மாணவர்கள் வகுப்பில் இருந்தபோதே கூரையின் பழுதுபார்க்கும் பணிகளும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கூரையின் மீது அதிகளவில் கட்டுமானப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததே அது இடிந்து விழ காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ விசாரணை நிறைவடைந்த பின்னரே விபத்திற்கான உண்மையான காரணம் அறிவிக்கப்படும்.

சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் தாமதமின்றி வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில முதலமைச்சர் மரியம் நவாஸ் ஷெரீப், “இது நெஞ்சை பதறவைக்கும் பேரவலம். இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

September 29, 2026
உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு
செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு

September 29, 2026
சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

September 29, 2026
மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!

September 29, 2026
நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது
செய்திகள்

நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது

September 29, 2026
உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்
செய்திகள்

உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்

September 29, 2026
Next Post
வெனிசுலா நிலநடுக்கம்; 6 நாட்களுக்குப் பிறகு 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

வெனிசுலா நிலநடுக்கம்; 6 நாட்களுக்குப் பிறகு 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு