தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணைவு ஒரு அரசியல் கூட்டணி அல்ல அது பொதுவான அரசியல் மேடை மட்டுமே என தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (19) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்ததுடன், அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெற்றுள்ள சந்தேகத்துக்கிடமான மரணங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தி உண்மையை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டியது அதன் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் அல்ல, ஐக்கிய மக்கள் முன்னணியிலேயே புரிந்துணர்வு அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும், தேவையெனில் சுயாதீனமாகவும் செயற்படும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்..








