பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற மாற்றுத்திறனாளி வொரன்ட் அதிகாரியான சாந்த ஜயதிலக என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
எனினும், குறித்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








