திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் தரம் 6 மாணவர்கள் 22 பேர், மனிதர்கள் உண்பதற்கு பொருத்தமற்ற விஷத் தன்மை கொண்ட விதைகளை உட்கொண்டதால் உடல்நலக்குறைவுக்கு ஆளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் நான்கு மாணவர்களின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்ததால், மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








