முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) இன்று (12) இடம்பெற்ற விசாரணைகளுக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
விசாரணைக்காக இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த யோஷித ராஜபக்ஷவிடம் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள வளாகத்திலிருந்து வெளியேறியுள்ளார்.








