Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இனிதே நிறைவு!

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இனிதே நிறைவு!

2 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (12) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஆலயத் தீர்த்தக் கேணியில் நண்பகல் 12 மணியளவில் நடைபெற்ற தீர்த்தோற்சவத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

கடந்த 03ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தின் 10ஆம் நாளான இன்று, ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

விசேட அபிஷேகங்கள் மற்றும் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜை நடைபெற்றது. பின்னர் மாமாங்கேஸ்வரர் சுவாமி வெளிவீதி உலா வந்ததுடன், வேத பாராயணங்கள் முழங்க பக்தர்களின் ‘அரோகரா’ கோஷங்களுக்கு மத்தியில் தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

இதனையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறைவழிபாடுகளில் ஈடுபட்டனர்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்றதும், ஸ்ரீ இராமபிரானால் வழிபடப்பட்டதாக வரலாற்றுத் தொன்மை கொண்டதுமான இப்புண்ணிய தலத்தில், ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்கள் பிதுர்க்கடன் செலுத்தி ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்வது சிறப்பம்சமாகும்.

இந்தத் தீர்த்தோற்சவத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கலந்துகொண்டு மாமாங்கேஸ்வரரின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!
செய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!

September 26, 2026
சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!
செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!

September 26, 2026
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!
செய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!

September 26, 2026
தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
செய்திகள்

தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

September 26, 2026
அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!
செய்திகள்

அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!

September 26, 2026
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!
செய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!

September 26, 2026
Next Post
பெண்ணின் காதைக் கடித்த சம்பவம்;  பொலிஸார் மீது குற்றச்சாட்டு

பெண்ணின் காதைக் கடித்த சம்பவம்; பொலிஸார் மீது குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு