விமானநிலையம் மற்றும் விமானச் சேவைகள் தனியார் நிறுவனத்தின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புத் துறையில் இதுவரை ஆண்கள் மட்டுமே இப்பதவிக்கு நியமிக்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக பெண் ஒருவர் பாதுகாப்பு மார்ஷலாக பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.
வசந்தி முருகேசுவின் இந்த நியமனம், இலங்கையின் சிவில் விமானப் பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பு மற்றும் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருவதற்கான முக்கிய முன்னேற்றமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், விமானப் பாதுகாப்புத் துறையில் பெண்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்புகளை அதிகரிப்பதுடன், எதிர்கால தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் இத்துறையில் சிறப்புமிக்க பதவிகளை நோக்கி பயணிப்பதற்கும் இந்த நியமனம் உத்வேகமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








