Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனையில் கஞ்சா மாடித்தோட்டம் செய்து விற்பனை செய்தவர் கைது

கல்முனையில் கஞ்சா மாடித்தோட்டம் செய்து விற்பனை செய்தவர் கைது

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா தோட்டப் பயிர்ச்செய்கையை பொலிஸார் நேற்று (19) புதன்கிழமை அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வு உத்தியோகத்தர்களான ஜவாத் மற்றும் இஸ்மத்ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். இதன்போது, குறித்த வீட்டின் 4ஆம் மாடியான மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.

கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாக இலங்கை நாட்டு கஞ்சாவினை விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் வழிகாட்டலில் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க, பொலிஸ் சார்ஜன்ட்டுகளான லக்ஸ்மன், சமீர, ஆரிப்தீன், மனோஜ், ராஜபக்ஸ, பொலிஸ் உத்தியோகத்தர்களான வாசுல, விஜிதரன் மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வீரசிங்க ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேகநபரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் மிகவும் பாதுகாப்பாக, ஒரு முறைப்படியான பயிர்ச்செய்கை போன்று வளர்க்கப்பட்டிருந்தன.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அங்கு வளர்க்கப்பட்ட செடிகளைக் கைப்பற்றிப் பிடுங்கி, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கல்முனைத் தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது

October 4, 2026
கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை
செய்திகள்

கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை

October 4, 2026
20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்
செய்திகள்

20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்

October 4, 2026
யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்
செய்திகள்

யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்

October 4, 2026
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்
செய்திகள்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்

October 4, 2026
Next Post
முல்லைத்தீவு – கிளிநொச்சிக்கு தனியான நீர் வழங்கல் பிராந்திய அலுவலகங்கள் தேவை; ரவிகரன்!

முல்லைத்தீவு - கிளிநொச்சிக்கு தனியான நீர் வழங்கல் பிராந்திய அலுவலகங்கள் தேவை; ரவிகரன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.