Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு; தவறான முடிவு எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்!

பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு; தவறான முடிவு எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காணாமல் போயிருந்த பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் பிரபாத் அநுராத தயாரத்னவின் சடலம் இன்று (24) முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, பதுளை–மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டைக்கு அருகிலுள்ள அடர்ந்த புதர் பகுதியில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மயக்கவியல் விசேட வைத்தியரான பிரபாத் அநுராத தயாரத்ன நேற்று (23) முற்பகல் முதல் காணாமல் போயிருந்த நிலையில், இது தொடர்பில் தகவல் கிடைத்ததும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதனையடுத்து, பதுளை–மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து அவரது கார் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டது.

கார் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, வைத்தியரைத் தேடும் நோக்கில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது, காரிலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் அடர்ந்த புதர் பகுதிக்குள் அமைந்திருந்த பாறையொன்றின் மீது வைத்தியரின் சடலம் கிடந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்து மூன்று வகையான மருந்துகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், குறித்த மருந்துகளை உட்கொண்டதன் மூலம் வைத்தியர் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், வைத்தியர் நீண்டகாலமாக மன அழுத்தத்திற்காக மருந்துகளை உட்கொண்டு வந்தமை தொடர்பான தகவல்களும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், வைத்தியரின் மரணம் தொடர்பான காரணத்தை உறுதிப்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகள் மஹியங்கனை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையிலிருந்து புறப்பட தனியார் சொகுசு பேருந்து தீக்கிரை
செய்திகள்

திருகோணமலையிலிருந்து புறப்பட தனியார் சொகுசு பேருந்து தீக்கிரை

October 11, 2026
“எங்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதீர்கள்”; சம்மாந்துறை வீதியோர மீன் வியாபாரிகள் கோரிக்கை
செய்திகள்

“எங்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதீர்கள்”; சம்மாந்துறை வீதியோர மீன் வியாபாரிகள் கோரிக்கை

October 11, 2026
தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றால் விலையை அதிகரிக்கலாம்-ஆனால் அரசாங்கம் அதிகரிக்காது; எரிசக்தி அமைச்சர்
செய்திகள்

தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றால் விலையை அதிகரிக்கலாம்-ஆனால் அரசாங்கம் அதிகரிக்காது; எரிசக்தி அமைச்சர்

October 11, 2026
கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்புளுவென்சா வைரஸ் தொற்றும் அபாயம்
செய்திகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்புளுவென்சா வைரஸ் தொற்றும் அபாயம்

October 11, 2026
வாய்த்தர்க்கம் முற்றியதால் மாமனாரை தாக்கிக் கொலை செய்த மருமகன்
செய்திகள்

வாய்த்தர்க்கம் முற்றியதால் மாமனாரை தாக்கிக் கொலை செய்த மருமகன்

October 11, 2026
ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்வனவு செய்யும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்வனவு செய்யும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு

October 11, 2026
Next Post
தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் மகன் போதைப்பொருள் விற்பனையின்போது கைது

தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் மகன் போதைப்பொருள் விற்பனையின்போது கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு