மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரதான வீதியில் இன்று கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிண்ணியாவிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த கார், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு வாகனத்தின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காரின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








