தெஹிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து இன்று (11) அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் காயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், சிகிச்சை பெற்று வந்த 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்களும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவர்களின் 55 வயதுடைய தந்தை தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








