முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மிக் போர் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
அவருக்கு குறித்த பிரிவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், இன்று முற்பகல் 9.10 மணியளவில் கோட்டாபய ராஜபக்ஷ அங்கு முன்னிலையாகியுள்ளார்.
மிக் போர் விமானக் கொள்முதல் தொடர்பான கொடுக்கல் வாங்கல் குறித்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவும் நேற்று (10) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.








