வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று (11) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்க, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், முப்படைகளின் தளபதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது, வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை அடையாளம் கண்டு, அவற்றை உரிய மக்களிடம் விரைவாக மீளக் கையளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
காணி விடுவிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.








