தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை பகுதிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து உள்ளிட்ட பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் ஆறு மோட்டார் வாகனங்களும் இரண்டு பேருந்துகளும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













