புதிய கூரைமேல் சூரிய மின் இணைப்புகளுக்கு இதுவரை நடைமுறையில் இருந்த ‘நெட் மீற்றரிங்’ மற்றும் ‘நெட் அக்கவுண்டிங்’ திட்டங்களை நிறுத்தி, இனிமேல் ‘நெட் பிளஸ்’ திட்டத்தை மாத்திரம் நடைமுறைப்படுத்த எரிசக்தி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
2026 செப்டெம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர் வழங்கப்படும் புதிய மின்கட்டமைப்பு இணைப்பு அனுமதிகளுக்கு இந்த நடைமுறை பொருந்தும்.
எனினும், அதற்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட அல்லது அனுமதி வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் தற்போதைய நிபந்தனைகளின் கீழ் தொடரும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்த நீடிப்புகளின் காலம் 12 ஆண்டுகளைத் தாண்டக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








