Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அநுர ஆட்சியில் “நீதிபதிகள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள்” – கைதுகள் அரசியல் பழிவாங்கலல்ல; எம்.பி கந்தசாமி பிரபு!

அநுர ஆட்சியில் “நீதிபதிகள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள்” – கைதுகள் அரசியல் பழிவாங்கலல்ல; எம்.பி கந்தசாமி பிரபு!

2 hours ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த காலங்களில் நீதிபதிகளைத் தங்களுக்குச் சார்பான தீர்ப்புகளை வழங்குமாறு பல அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன எனவும், ஆனால் இன்று எந்தவொரு அரசியல் அழுத்தமும் இல்லாமல் நீதிபதிகள் சுதந்திரமான கட்டமைப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர் எனவும், அதன் வெளிப்பாடுகளே இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கைதுகள் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கைதுகள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பலவிதமான கருத்துக்களை மக்கள் மத்தியில் முன்வைத்துக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விசாரணைகள் தொடர்பாக அவர்கள் இதற்கு முன்னரும் பல தடவைகள் விசாரணை அதிகாரிகளிடம் சென்று வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்ததாகவும், இது நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகள் என்றும் தெரிவித்தார். அரசியல் பலத்தைப் பயன்படுத்தி இதுவரை தப்பித்துக்கொண்டிருந்தவர்கள், இன்று சுயாதீனமான சட்டக் கட்டமைப்பின் மூலமே பொறுப்புக் கூறப்படுகின்றனர் என்றார்.

காவல்துறையினர் சுயாதீனமாகத் தங்களது விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும், விசாரணை அதிகாரிகளுக்கு அரசாங்கம் எந்தவொரு அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தக் கைதுகள் அரசியல் பழிவாங்கல் அல்ல, விசாரணை அடிப்படையிலேயே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன எனவும், யார் என்ற பாகுபாடின்றி ஊழலுக்கு எதிரான விசாரணை சுதந்திரமாக நடைபெற்று தண்டனைகள் வழங்கப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

முன்னர் ஊழல் விசாரணைகள் இடம்பெறப்போவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்தும் அது நடைபெறவில்லை எனக் குறை கூறிய எதிர்க்கட்சிகள், இன்று கைதுகள் இடம்பெறும்போது அதை “அரசியல் பழிவாங்கல்” என அழைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். தேசிய மக்கள் சக்தி அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு தொடர்வதாகவும், மக்கள் ஆதரவை இழந்த அரசியல்வாதிகளே இவ்வாறு குரல் எழுப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் செல்வாக்கு மற்றும் மக்கள் பலம் அரசுக்குக் குறைந்துவருகிறது என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றை மறுத்த அவர், வருகின்ற தேர்தலில் தமது கட்சி மிகப்பெரிய அளவிலான வாக்குகளைப் பெறும் எனவும், மக்களின் ஆதரவு தற்போது அதிகரித்துள்ளதற்கு உதாரணமாக ஜனாதிபதியின் பொதுக் கூட்டங்களுக்கு மக்கள் திரளாகக் கலந்துகொள்வதைக் குறிப்பிட்டார். சர்வதேச ரீதியிலான அங்கீகாரத்துடன் அரசு பயணித்துக்கொண்டிருப்பதை மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், ‘மக்கள் நேசிக்கும் அரசு’ என்பதை எதிர்க்கட்சியினருக்கு உணர்த்திக்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை; உயர் நீதிமன்றம்!
செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை; உயர் நீதிமன்றம்!

September 22, 2026
பொதுமன்னிப்பு செல்லாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு; அநுரவிடம் புதிய பொதுமன்னிப்பு கோரும்   ஞானசார தேரர்!
செய்திகள்

பொதுமன்னிப்பு செல்லாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு; அநுரவிடம் புதிய பொதுமன்னிப்பு கோரும்   ஞானசார தேரர்!

September 22, 2026
பட்டிருப்பு ரோட்டரி கழகத்தின் இரண்டாவது பதவியேற்பு விழா; மாணவர்களுக்காக மூன்று புதிய சமூகநலத் திட்டங்கள்!
மட்டு செய்திகள்

பட்டிருப்பு ரோட்டரி கழகத்தின் இரண்டாவது பதவியேற்பு விழா; மாணவர்களுக்காக மூன்று புதிய சமூகநலத் திட்டங்கள்!

September 22, 2026
மட்டக்களப்பு வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலய மாணவிகள் தேசிய மட்ட கைப்பந்து போட்டியில் மூன்றாமிடம்
செய்திகள்

மட்டக்களப்பு வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலய மாணவிகள் தேசிய மட்ட கைப்பந்து போட்டியில் மூன்றாமிடம்

September 22, 2026
புதிய சூரிய மின் இணைப்புகளுக்கு ‘நெட் பிளஸ்’ திட்டம் மட்டுமே!
செய்திகள்

புதிய சூரிய மின் இணைப்புகளுக்கு ‘நெட் பிளஸ்’ திட்டம் மட்டுமே!

September 22, 2026
21 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது!
செய்திகள்

21 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது!

September 22, 2026
Next Post
பட்டிருப்பு ரோட்டரி கழகத்தின் இரண்டாவது பதவியேற்பு விழா; மாணவர்களுக்காக மூன்று புதிய சமூகநலத் திட்டங்கள்!

பட்டிருப்பு ரோட்டரி கழகத்தின் இரண்டாவது பதவியேற்பு விழா; மாணவர்களுக்காக மூன்று புதிய சமூகநலத் திட்டங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு