Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யுத்த மனநிலையைத் தடுக்க திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டது; பொலிசார்

யுத்த மனநிலையைத் தடுக்க திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டது; பொலிசார்

46 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த உயிர்நீத்த திலீபனின் உருவச்சிலை இன்று (27) காலை காவல்துறையினரால் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை சுமார் 6.30 மணியளவில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று உருவச்சிலையை அகற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று (26) இடம்பெற்றிருந்த நிலையில், அதற்கு மறுநாளே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி காவல்துறையினர் வருகை தந்து உருவச்சிலையை அகற்றியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எனினும், காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே உருவச்சிலை அகற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில் ‘எல்லான் படை’ என்ற குழு செயற்படுவதாக கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கும், யுத்த மனநிலையை உருவாக்கக்கூடிய சூழ்நிலைகளைத் தடுப்பதற்கும் உருவச்சிலை அகற்றப்பட்டதாகவும் காவல்துறை தரப்பு விளக்கமளித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளதாகவும், வழக்கின் அடுத்த விசாரணை ஒக்டோபர் 2ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு யாழ்ப்பாண மாநகர சபையினால் நேற்று வரை அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் சீருடையைப் புதிய முறையில் வடிவமைப்பதற்கு திட்டம்!
செய்திகள்

பொலிஸ் சீருடையைப் புதிய முறையில் வடிவமைப்பதற்கு திட்டம்!

September 28, 2026
உலக எரிபொருள் விலை உயர்வால் இலங்கையில் பொருளாதார சவால்கள்; ஜனாதிபதி தகவல்
செய்திகள்

உலக எரிபொருள் விலை உயர்வால் இலங்கையில் பொருளாதார சவால்கள்; ஜனாதிபதி தகவல்

September 28, 2026
திலீபன் சிலை அகற்றம்; அரசுக்கு நன்றி தெரிவித்த அருண் சித்தார்த்!
செய்திகள்

திலீபன் சிலை அகற்றம்; அரசுக்கு நன்றி தெரிவித்த அருண் சித்தார்த்!

September 27, 2026
பிளாஸ்டிக் பால் போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனை ஆரம்பம்
செய்திகள்

பிளாஸ்டிக் பால் போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனை ஆரம்பம்

September 27, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை; அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை; அமைச்சர் சந்திரசேகர்

September 27, 2026
அம்பாறை கடற்கரைகளில் அதிகரிக்கும் சட்டவிரோத கடல்மண் கடத்தல்
செய்திகள்

அம்பாறை கடற்கரைகளில் அதிகரிக்கும் சட்டவிரோத கடல்மண் கடத்தல்

September 27, 2026
Next Post
பொலிஸ் சீருடையைப் புதிய முறையில் வடிவமைப்பதற்கு திட்டம்!

பொலிஸ் சீருடையைப் புதிய முறையில் வடிவமைப்பதற்கு திட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு