கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் 3 ஆண்டுகளில் 100 திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 முதல் 2023 வரை பதிவான சம்பவங்களில் 11 திருட்டுகளின் பெறுமதி 580 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஏனைய 89 சம்பவங்களின் பெறுமதி கண்டறியப்படவில்லை.
மின் கேபிள்கள் உள்ளிட்ட உபகரணங்கள் போதிய பாதுகாப்பின்றி அமைக்கப்பட்டிருந்ததால் அவற்றை எளிதில் அகற்றக்கூடிய நிலை காணப்பட்டதாகவும், திருட்டுகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், நெடுஞ்சாலையின் சேதங்களை முழுமையாக சீரமைக்க 1,770 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக செலவாகும் என கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.








