2025/2026 ஆம் ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்துவதற்கான கடைசி நாள் இன்றாகும் (30) என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் பங்குடைமை நிறுவனங்கள் சார்பில் வருமான வரி செலுத்துவோர், இன்று தங்களது வரிப் பணத்தைச் செலுத்துமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்போது, வரி செலுத்துவதற்கான காலப்பகுதிக் குறியீடாக 25260 பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிறுவன வருமான வரிக்கு 02, தனிநபர் வருமான வரிக்கு 05, பங்குடைமை நிறுவனங்களின் வருமான வரிக்கு 09 ஆகிய வரி வகைக் குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரியை இணையவழியாகவோ அல்லது இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலோ செலுத்த முடியும்.
குறித்த காலக்கெடுவுக்குப் பின்னர் வரி செலுத்துவோருக்கு மேலதிக வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும், எனவே நிலுவையிலுள்ள வரிப் பணத்தை இன்றே செலுத்துமாறும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு 1944 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக திணைக்களத்தைத் தொடர்புகொள்ள முடியும்.









