நாமல் ராஜபக்சவிடம் தற்போது மாற்றம் தென்படுவதாகவும், அவர் அனுபவத்துடன் பேசுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான தகுதி நாமல் ராஜபக்சவிடம் உள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் வேறு எவரிடமும் இத்தகைய ஆளுமையைக் காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகி அவரது கட்சி ஆட்சியைக் கைப்பற்றினால், தனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் பட்சத்தில் வடக்கை அபிவிருத்தி செய்வதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பேன் எனவும் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.








