2027 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி முதலாம் வாசிப்பிற்காக பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரையினை முன்வைக்கவுள்ளார்.
அதன்பிறகு வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் நவம்பர் 12 ஆம் திகதி முதல் டிசம்பர் 14 வரை நடைபெறவுள்ளது.
இதனையடுத்து மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை டிசம்பர் 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.








