இன்று ஒக்டோபர் 1ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், இலங்கை உட்பட உலகெங்கும் வாழும் அனைத்து சிறுவர்களுக்கும் இனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
சிறுவர்கள் ஒவ்வொருவரும் கல்வி கற்கவும், மகிழ்ச்சியாக வாழவும், பாதுகாப்பான சூழலில் வளரவும், தங்களுடைய கனவுகளை நனவாக்குவதற்கான வாய்ப்புகளைப் பெறவும் உரிமையுடையவர்கள். சிறுவர் உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பெற்றோர், ஆசிரியர்கள், சமூகத்தினர் மற்றும் அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும்.
இன்றைய நாளில், இலங்கை உட்பட உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் சிறுவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையவும், அவர்களின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் நலன் உறுதி செய்யப்படவும் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
சிறுவர்களின் குரல்களுக்கு மதிப்பளித்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அன்பும் அரவணைப்பும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவோம்.
எனவே 2026 ஆம் ஆண்டில் இலங்கையில் திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள் எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுகின்றது.
இந்நிலையில் இன்றைய தினத்தில் சிறுவர் தினத்தை கொண்டாடும் அனைத்து சிறுவர்களுக்கும் battinaatham bedia வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.








