இந்தியாவின் மகாராஷ்டிராவில் இருந்து 86 யாத்திரிகர்கள் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்த நிலையில், அவர்களின் யாத்திரையின் பின்னணியில் முக்கியமான நோக்கம் ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மதீஸ்வரி அம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட இவர்கள், காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவையின் ஊடாக இன்று (01) காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
ஆனால், இந்த யாத்திரையின் முக்கிய நோக்கம் நயினாதீவு அம்மன் ஆலய வழிபாடு மட்டுமல்ல.
நயினாதீவு அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், அங்கிருந்து அகண்ட தீபத்தை மகாராஷ்டிராவில் உள்ள அம்மன் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லவும் இந்த யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆலய பிரதம குரு வஜீஸ்வரிமாதா பவுண்டேசன் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த யாத்திரை, இந்தியாவில் இருந்து நயினாதீவு அம்மன் ஆலயத்திற்கு யாத்திரிகர்கள் குழுவாக வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.








