Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூருக்கு இராணுவ மேஜர் ஒருவரே ஐஸ் போதைப்பொருள் கொண்டுவருவதாக பகிரங்க குற்றச்சாட்டு!

ஏறாவூருக்கு இராணுவ மேஜர் ஒருவரே ஐஸ் போதைப்பொருள் கொண்டுவருவதாக பகிரங்க குற்றச்சாட்டு!

42 minutes ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஏறாவூர் பிரதேசத்தில் இராணுவ மேஜர் அனஸ் என்பவர் தலைமையில் போதைப்பொருள் ஒழிக்கும் குழு என்ற பெயரில் போதைப்பொருள் மாபியாக்களுடன் இயக்கி வரும் குழு, அப்பாவி இளைஞர்களுக்கு போதை பொருளை வைத்து கைது செய்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என பாதுகாப்பு படைகளுக்கு நீண்ட காலமாக இரகசிய தகவல் வழங்கி வரும் ஏறாவூரைச் சேர்ந்த செய்யது முகமது பளீல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நான் நீண்டகாலமாக இராணுவம் பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் பாதுகாப்பு படையினருக்கு போதை பொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பான இரகசிய தகவல்களை வழங்கி வருகிறேன்.

ஏறாவூர் பிரதேசத்தில் இராணுவ மேஜர் அன்ஸ் என்பவர் தலைமையில் போதைப்பொருளை ஒழிக்கும் குழு என்ற பெயரில் ஒரு குழுவை இயக்கி வருகின்றார். இதில் அதிகமானோர் போதைப்பொருள் பாவனையாளர்கள் இவர்களில் பலர் போதை பொருள் மாபியாக்களுடன் சேர்ந்து போதை பொருளை அப்பாவி இளைஞர்களிடம் வைத்து அவர்களை கைது செய்ய வைத்து வருகின்றனர்.

இவ்வாறு மேஜர் அனஸ் குழுவின் செயல்பாடு தொடர்பாக நான்; தகவல்களை வழங்கி வருவதால் அனஸ் குழுவினர் என்னை ; பாதுகாப்பு படைகளுக்கு இரகசிய தகவல்களை வழங்க கூடாது இராணுவ மேஜர் தான் இங்கு போதை பொருள் தொடர்பாக தகவல்களை வழங்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளதாக அந்த குழுவினர்கள் என் மீது அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அண்மையில் அவருடைய குழுவுடன் வந்த இராணுவ மேஜர் அனஸ் அப்பாவி இளைஞர் ஒருவரை போதை பொருள் வைத்து பிடிப்பதற்காக வந்த போது அதனை நான் தடுக்க முற்பட்ட என் மீது மோட்டார் சைக்கிள் தலை கவசத்தால் தாக்கினார்.

இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் மின்னேரியா இராணுவ முகாமிற்கு முறைப்பாடு செய்துள்ளேன். இருந்தபோதும் என்னை தாக்கிய மேஜர் மீது பொலிசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேவேளை எனக்கு இன்று வரை பொலிஸ் நிலையத்தில் நீதிமன்றத்தில் எந்தவிதமான முறைப்பாடும் இல்லாத என்னை ஐஸ் போதைப் பொருள் அல்லது குண்டுகள், அல்லது துப்பாக்கி வைத்து கைது செய்வேன் என இராணுவ மேஜர் அனஸ் தலைமையில் இயங்கி வரும் குழுவினர் என்னை மிரட்டி வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இராணுவ முகாமில் இருந்து தான் போதை பொருள் வருகின்றதாக அண்மையில் ஊடகங்கள் ஊடாக தெரிவித்தார். எனவே இராணுவ மேஜர் அனஸ் அவ்வாறு செயற்படுகின்றாரா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காரணம் கொழும்பில் கடமையாற்றி வரும் இவர் அடிக்கடி லீவில் வீட்டிற்கு வரும் போது தான் இங்கு இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. எனவே உரிய அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாணவிகளுக்கு ஆபாசக் காணொளி காட்டிய விரிவுரையாளர் கைது!
செய்திகள்

மாணவிகளுக்கு ஆபாசக் காணொளி காட்டிய விரிவுரையாளர் கைது!

October 2, 2026
இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!
உலக செய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

October 2, 2026
அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!
செய்திகள்

அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!

October 2, 2026
சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு
செய்திகள்

சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு

October 2, 2026
கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி
செய்திகள்

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி

October 2, 2026
மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு
செய்திகள்

மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு

October 2, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.