Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை!

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை!

52 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் மனநல வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சதுரி சுரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மனநல வைத்தியர்களுக்கு வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது, மனநல வைத்தியர்களின் பற்றாக்குறைக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக விசேட மனநல வைத்தியர் பேராசிரியர் சதுரி சுரவீர சுட்டிக்காட்டினார்.

“மனநல வைத்தியர்களின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்டளவு குறைபாடு காணப்படுகிறது. ஏனெனில் இலங்கையிலுள்ள மனநல வைத்தியர்களுக்கு அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகிய நாடுகளில் எந்நேரமும் வேலைவாய்ப்புகள் உள்ளன. மேலும் இங்கு வழங்கப்படும் பயிற்சியும் பெரிதும் மதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தச் சிக்கல் தொடர்ச்சியாக நிலவுகிறது. தற்போது சுமார் 100 முதல் 120 வரையிலான விசேட மனநல வைத்தியர்கள் உள்ளனர். அவர்களிடம் சிகிச்சை பெற வரும் நோயாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கிளினிக் மற்றும் தேசிய மனநல நிறுவனத்தின் கிளினிக் ஆகிய இரண்டிலும், ஒரு காலை நேர கிளினிக்கிற்கு மட்டும் சுமார் 150 நோயாளர்கள் வருகை தருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சமூகத்தில் வாழும் எந்தவொரு நபருக்கும் மனநலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

“சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எவருக்கும் மனநலப் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ‘எனக்கு இது வராது, பக்கத்து வீட்டுக்காரருக்குத்தான் வரும்’ என்று எண்ணியிருக்கக் கூடாது. யாருக்கேனும் மனநலப் பிரச்சனை இருந்தால், அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மனநோய்களின் போது நமது எண்ணங்கள்தான் மாற்றமடைகின்றன. அதனால் நமது எண்ணங்கள் மாறியிருப்பதை நம்மால் உணர முடியாமல் போகலாம். ஆனால் நமக்குத் தெரியாவிட்டாலும் மற்றவர்களால் அதனை உணர முடியும். எனவே, எந்தவொரு வைத்தியர்களிடமாவது காண்பிக்க வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமக்கு நோய் உள்ளது என்பதை அறியாத காரணத்தினாலேயே மருந்து சாப்பிட முடியாமல் போகிறது. மற்றைய விடயம் என்னவென்றால், இது நமக்கு நடந்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; அவ்வேளையில் அவர்களால் இயல்பாகப் பணியாற்ற முடியாது. அந்த காலப்பகுதியில் நோயின் காரணமாகவே அவர்களின் நடத்தை மாறுகிறது. அதற்குச் சிகிச்சை அளித்துக் குணப்படுத்தியதும், பழைய நபர் மீண்டும் நம்மிடம் திரும்பி வருவார். எனவே, தகுதியான ஒரு வைத்தியர் மற்றும் மனநல வைத்தியரிடம் சிகிச்சை பெற வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வடக்கு, கிழக்கு சுற்றுலா வருவாய் உள்ளூர் மக்களுக்கே சென்றடைய வேண்டும்; சாணக்கியன் வலியுறுத்தல்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு சுற்றுலா வருவாய் உள்ளூர் மக்களுக்கே சென்றடைய வேண்டும்; சாணக்கியன் வலியுறுத்தல்!

October 8, 2026
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; எதிர்க்கட்சியினர் கையெழுத்து!
செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை; எதிர்க்கட்சியினர் கையெழுத்து!

October 8, 2026
பொகவந்தலாவையில் மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளை!
செய்திகள்

பொகவந்தலாவையில் மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளை!

October 8, 2026
27 மாத விசாரணைக்கு பின்னர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பு; நீதவான் கோசல சேனாதீர மீண்டும் பணியில்!
செய்திகள்

27 மாத விசாரணைக்கு பின்னர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பு; நீதவான் கோசல சேனாதீர மீண்டும் பணியில்!

October 8, 2026
அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !
செய்திகள்

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது !

October 8, 2026
14ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் மழை அதிகரிக்கும்; புதிய காற்றுச் சுழற்சி உருவாகும் சாத்தியம்
செய்திகள்

14ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் மழை அதிகரிக்கும்; புதிய காற்றுச் சுழற்சி உருவாகும் சாத்தியம்

October 8, 2026
Next Post
வடக்கு, கிழக்கு சுற்றுலா வருவாய் உள்ளூர் மக்களுக்கே சென்றடைய வேண்டும்; சாணக்கியன் வலியுறுத்தல்!

வடக்கு, கிழக்கு சுற்றுலா வருவாய் உள்ளூர் மக்களுக்கே சென்றடைய வேண்டும்; சாணக்கியன் வலியுறுத்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு