Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனியார் துறையினருக்கும் மெட்ரோ பஸ் சேவையில் இணைய வாய்ப்பு; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

தனியார் துறையினருக்கும் மெட்ரோ பஸ் சேவையில் இணைய வாய்ப்பு; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

40 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மெட்ரோ பஸ் சேவையில் தனியார் துறையினரும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு இன்னும் ஒரு வருடத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மெட்ரோ பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான தனியார் பஸ்கள் இச்சேவைக்கு இடையூறு ஏற்படுத்துவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார். எனினும், மிகச் சில தனியார் பஸ்களினால் மெட்ரோ பஸ்கள் தொடர்பான விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சம்பவங்களை ஒட்டுமொத்தத் தனியார் பஸ் உரிமையாளர்களுடனும் தொடர்புபடுத்த முடியாது எனத் தெரிவித்த அமைச்சர், சம்பந்தப்பட்ட சிலரின் செயற்பாடுகள் காரணமாக முழுத் தனியார் பஸ் துறையினரையும் குற்றம்சாட்டுவது பொருத்தமற்றது எனவும் கூறினார்.

அத்துடன், மெட்ரோ பஸ்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார்.

இலங்கை மக்களின் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு எனக் குறிப்பிட்ட அமைச்சர், மெட்ரோ பஸ் சேவைக்கு எதிராகச் செயற்படுவதைத் தவிர்த்து, நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய போக்குவரத்து முறைமைக்கு ஏற்ப தனியார் பஸ் உரிமையாளர்களும் சாரதிகளும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், எதிர்வரும் ஒரு வருட காலப்பகுதிக்குள் மெட்ரோ பஸ் சேவையைத் தனியார் துறையினருக்கும் திறந்துவிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரியாத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவை நாளை வரை இடைநிறுத்தம்!
செய்திகள்

ரியாத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவை நாளை வரை இடைநிறுத்தம்!

October 9, 2026
களுத்துறையில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை; மனைவி காயம்!
செய்திகள்

களுத்துறையில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை; மனைவி காயம்!

October 9, 2026
“எச்சரிக்கையுடன் இருங்கள்; தேவையற்ற வெளிநடமாட்டங்களைத் தவிருங்கள்!” – சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்
உலக செய்திகள்

“எச்சரிக்கையுடன் இருங்கள்; தேவையற்ற வெளிநடமாட்டங்களைத் தவிருங்கள்!” – சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்

October 9, 2026
தொலைதூர தனியார் பேருந்துகளில் இனி ஏஐ தொழில்நுட்பம்
செய்திகள்

தொலைதூர தனியார் பேருந்துகளில் இனி ஏஐ தொழில்நுட்பம்

October 9, 2026
இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்
செய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்

October 8, 2026
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை
உலக செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

October 8, 2026
Next Post
ரியாத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவை நாளை வரை இடைநிறுத்தம்!

ரியாத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவை நாளை வரை இடைநிறுத்தம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு