சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கான விமான சேவைகளை நாளை (10) வரை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஹூதி அமைப்பினரின் தாக்குதல்கள் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ரியாத் நகருக்குச் செல்லவிருந்த 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் சர்வதேச விமானப் போக்குவரத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பயணிகள் தங்களது விமானப் பயணங்கள் தொடர்பான புதிய தகவல்களை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.








