Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஞானசார தேரருக்காக வீதியில் இறங்கிய மகா சங்கத்தினர்; கண்டியில் அதிரடியாக ஆரம்பமான போராட்டம்!

ஞானசார தேரருக்காக வீதியில் இறங்கிய மகா சங்கத்தினர்; கண்டியில் அதிரடியாக ஆரம்பமான போராட்டம்!

1 month ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை களைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுவிப்பதற்காகவும் மகா சங்கத்தினரை முன்னிலைப்படுத்திய பாதயாத்திரை ஒன்று இன்று (10) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து ஆரம்பமானது.

பாதயாத்திரை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், கண்டி மகுல் மடுவ பகுதியில் விசேட ஆசீர்வாத நிகழ்வும் நடத்தப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த பூஜ்ய உலப்பனே சுமங்கல தேரர், தற்போதைய அரசாங்கத்தினால் தன்னிச்சையான முறையில் ஞானசார தேரருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் வாரியப்பொல ஸ்ரீ சுமங்கல தேரர் தேசத்தினதும் சம்புத்த சாசனத்தினதும் பாதுகாப்புக்காகக் குரல் கொடுத்தது போன்று, ஞானசார தேரரும் நாடு, தேசம் மற்றும் சாசனத்தின் அபிவிருத்திக்காகவே குரல் எழுப்பினார் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டது அவரது தனிப்பட்ட காரியத்திற்காக அல்ல எனவும், அவர் சிறைத்தண்டனை அனுபவிப்பது முழு தேசம் மற்றும் சாசனத்திற்காகவே எனவும் தெரிவித்த சுமங்கல தேரர், அவரைத் தனிமைப்படுத்தாமல் நிபந்தனையின்றி அவருக்காக முன்னிற்பது அனைவரினதும் கடமையாகும் என வலியுறுத்தினார்.

ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் வாரியப்பொல சுமங்கல தேரரின் சிலைக்கு அருகிலும் ஆரம்பமான இந்த பாதயாத்திரை, ஞானசார தேரர் சிறைவைக்கப்பட்டுள்ள இடம் வரை சென்றடையவுள்ளது.

அவருக்கு விடுதலை கிடைக்கும் வரை மற்றும் அநீதிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டம் எந்த வகையிலும் கைவிடப்பட மாட்டாது எனவும், நிலவும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் வன்முறையற்ற முறையில் பாதயாத்திரையில் இணையுமாறும் உலப்பனே சுமங்கல தேரர் அனைத்து மக்களிடமும் மேலும் கோரிக்கை விடுத்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெளிநாட்டு ஆசை காட்டி பலரிடம் பணம் சுருட்டிய யாழ் நபரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டது
செய்திகள்

வெளிநாட்டு ஆசை காட்டி பலரிடம் பணம் சுருட்டிய யாழ் நபரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டது

November 11, 2026
கொழும்பில் கனமழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின; போக்குவரத்தும் பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின; போக்குவரத்தும் பாதிப்பு!

November 11, 2026
வணிகப் பெயர் பதிவை எளிமைப்படுத்தும் புதிய திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்!
செய்திகள்

வணிகப் பெயர் பதிவை எளிமைப்படுத்தும் புதிய திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்!

November 11, 2026
பதுளை விபத்தில் பல்கலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; இழப்பீடு தொடர்பில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

பதுளை விபத்தில் பல்கலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; இழப்பீடு தொடர்பில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

November 11, 2026
இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் தொடர்பில் இழுபறி; இடைக்காலப் பிரதமராகத் தொடரும் நெதன்யாகு!
செய்திகள்

இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் தொடர்பில் இழுபறி; இடைக்காலப் பிரதமராகத் தொடரும் நெதன்யாகு!

November 11, 2026
யாழ்ப்பாணத்தில் சிறைக்காவலர்களிடமிருந்து தப்பிய கைதி நஞ்சருந்தி வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சிறைக்காவலர்களிடமிருந்து தப்பிய கைதி நஞ்சருந்தி வைத்தியசாலையில் அனுமதி!

November 11, 2026
Next Post
வடக்கு, மலையக ரயில் சேவைகளில் பாரிய வீழ்ச்சி; 60 சேவைகளில் 16 மட்டுமே இயக்கம்!

வடக்கு, மலையக ரயில் சேவைகளில் பாரிய வீழ்ச்சி; 60 சேவைகளில் 16 மட்டுமே இயக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு