Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இம்ரான் கான் விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது?; ரவூப் ஹக்கீம் கேள்வி

இம்ரான் கான் விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் ஏன் அஞ்சுகிறது?; ரவூப் ஹக்கீம் கேள்வி

24 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக் கோரும் பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

நேற்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இம்ரான் கான் விவகாரம் தொடர்பான விவாதக் கோரிக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா முன்வைத்த இந்த விவாதக் கோரிக்கை, பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனை விமர்சித்த ரவூப் ஹக்கீம், கொவிட்-19 காலத்தில் இலங்கையில் முஸ்லிம்களின் கட்டாயத் தகனக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முக்கிய பங்காற்றியதை நினைவுபடுத்தினார்.

இம்ரான் கானின் தலையீட்டைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் தனது கொள்கையை மாற்றி, கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இதனைப் பாராளுமன்றத்தில் விவாதிக்க ஏன் முடியாது? நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பிய அவர், நட்பு நாடுகளுடன் உறவைப் பேணுவது அந்நாடுகளில் இடம்பெறும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதைத் தடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை பரஸ்பர நலன்களை விட கொள்கை மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பாலஸ்தீன விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் பணிச்சுமையைக் கருத்திற்கொண்டு அமைச்சின் நிர்வாகத்துக்கு மேலதிக செயலாளர்களை நியமிப்பது குறித்தும் ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும் எனவும் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கைப் பெண் சமுத்திர ஆய்வாளருக்கு பிரித்தானிய சமுத்திர உயிரியல் சங்கம் கௌரவம்!
செய்திகள்

இலங்கைப் பெண் சமுத்திர ஆய்வாளருக்கு பிரித்தானிய சமுத்திர உயிரியல் சங்கம் கௌரவம்!

November 24, 2026
பல்கலைக்கழக ஊழியர்கள் நாளை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

பல்கலைக்கழக ஊழியர்கள் நாளை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு!

November 24, 2026
யாழில் வீடொன்றுக்குள் புகுந்த குழுவினரால் அரங்கேறிய கொடூரம்!
செய்திகள்

யாழில் வீடொன்றுக்குள் புகுந்த குழுவினரால் அரங்கேறிய கொடூரம்!

November 24, 2026
கல்முனை, சாய்ந்தமருது உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
அரசியல்

கல்முனை, சாய்ந்தமருது உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

November 24, 2026
மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் இருவர் கைது; 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் இருவர் கைது; 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

November 24, 2026
கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக 2,286 புதிய வீடுகள் நிர்மாணம்!
செய்திகள்

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக 2,286 புதிய வீடுகள் நிர்மாணம்!

November 24, 2026
Next Post
இலங்கைப் பெண் சமுத்திர ஆய்வாளருக்கு பிரித்தானிய சமுத்திர உயிரியல் சங்கம் கௌரவம்!

இலங்கைப் பெண் சமுத்திர ஆய்வாளருக்கு பிரித்தானிய சமுத்திர உயிரியல் சங்கம் கௌரவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு