Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு; பிரதமர் ஹரிணி!

கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு; பிரதமர் ஹரிணி!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொலன்னறுவை விஜித ஆரம்பப் பாடசாலையில் 55 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இருமாடிக் கட்டடம் மாணவர்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. 2026 ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பயிற்சி மற்றும் தரமான கற்றல் சூழலை மேம்படுத்துவது அவசியம் என வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டடத்தில் எட்டு ஆரம்ப வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டடத்தை மாணவர்களிடம் கையளித்த பின்னர், மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், புதிய வகுப்பறைகளையும் பார்வையிட்டதுடன், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கல்விசார் மற்றும் நலன்புரிப் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், கல்விச் சீர்திருத்தம் என்பது பாடத்திட்டங்களை மாற்றியமைப்பதுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட முடியாது எனக் குறிப்பிட்டார். புதிய பாடத்திட்டங்களைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வகுப்பறைகள், கற்றல் உபகரணங்கள், ஆசிரியர் பயிற்சி மற்றும் பொருத்தமான பாடசாலைச் சூழல் ஆகியவற்றையும் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, ஒவ்வொரு பாடசாலையின் தயார்நிலை மற்றும் வசதிகளைக் கருத்திற்கொண்டு புதிய பாடத்திட்டங்களைப் படிப்படியாக அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம், மாணவர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் கற்கக்கூடிய சூழலை உருவாக்குவதுடன், ஆசிரியர்கள் பயனுள்ள வகையில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் ஏற்ற தரமான பாடசாலைச் சூழலை ஏற்படுத்துவதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் வகுப்பறைகளுக்கான போதிய இடவசதிகள், தளபாடங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மேலும் வலுப்பெறுவதற்கு ஏற்ப கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்காக 2027ஆம் ஆண்டில், 2026ஆம் ஆண்டை விட அதிக நிதியை ஒதுக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கல்வித்துறையின் தொழில்சார் தரத்தையும் ஒழுங்குமுறைகளையும் உறுதிப்படுத்தும் நோக்கில் கல்விச் சபையொன்றை நிறுவுவதற்கான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தயார்படுத்தும் வகையில், பாடசாலைப் பாடத்திட்டங்களுடன் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டங்களும் திருத்தியமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்வி முறையில் நிலவும் நிறுவன ரீதியான சிக்கல்கள், உட்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை மற்றும் மனித வளக் குறைபாடுகள் ஆகியவற்றுக்குத் தீர்வுகளை வழங்கி, முழுக் கல்வி முறையிலும் தரமான மாற்றத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு எனப் பிரதமர் வலியுறுத்தினார். அறிவு, திறன்கள் மற்றும் நற்பண்புகளைக் கொண்ட பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவது கல்வி முறையின் அடிப்படைப் பொறுப்பாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மாற்றங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்கு இணையாகப் பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினரின் ஒத்துழைப்பும் முக்கியமானது எனக் குறிப்பிட்ட பிரதமர், கிராமியப் பாடசாலைகளைப் பாதுகாத்து, அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத், பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார, லங்காபுர பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், வடமத்திய மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

35 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமைகிறது காங்கேசன்துறை தபால் நிலையம்!
செய்திகள்

35 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமைகிறது காங்கேசன்துறை தபால் நிலையம்!

October 26, 2026
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு; மீனவர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு; மீனவர் கைது!

October 26, 2026
பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு; சாரதி காயம்!
செய்திகள்

பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு; சாரதி காயம்!

October 26, 2026
நாகொட இரட்டைக் கொலை; பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடையவர் கைது!
செய்திகள்

நாகொட இரட்டைக் கொலை; பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடையவர் கைது!

October 26, 2026
வடக்கு, கிழக்கில் வனப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு?; வடக்கில் புதிய வனப் பகுதிகளை அறிவிப்பதற்கும் தற்காலிகத் தடை!
செய்திகள்

வடக்கு, கிழக்கில் வனப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு?; வடக்கில் புதிய வனப் பகுதிகளை அறிவிப்பதற்கும் தற்காலிகத் தடை!

October 26, 2026
இலங்கை மருத்துவமனைகளில் கொலோஸ்டமி பைகளுக்குத் தட்டுப்பாடு!
செய்திகள்

இலங்கை மருத்துவமனைகளில் கொலோஸ்டமி பைகளுக்குத் தட்டுப்பாடு!

October 26, 2026
Next Post
நாகொட இரட்டைக் கொலை; பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடையவர் கைது!

நாகொட இரட்டைக் கொலை; பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடையவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.