அனுராதபுர புனித நகரத் திட்டத்திற்கு எதிராக ருவன்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித பூமிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் சத்தியாக்கிரகப் போராட்டம், நீதிமன்ற உத்தரவையும் மீறி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் மற்றும் பொதுமக்கள் நேற்று (07) காலை இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதன்போது தற்காலிகக் கூடாரம் அமைக்க முற்பட்டதால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, போராட்டக்காரர்கள் புனித பூமிப் பகுதியிலிருந்து வெளியேறவும், தற்காலிகக் கூடாரங்களை அகற்றவும், தொல்பொருள் சின்னங்களுக்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது என்றும் அனுராதபுர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், நீதிமன்ற உத்தரவையும் பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் இரவையும் அங்கேயே கழித்து போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
அனுராதபுர புனித நகரத் திட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படும் வரை போராட்டம் தொடரும் என பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.








