தீபாவளித் திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு வரலாற்றுப் புகழ்மிக்க மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று (08) சிறப்பு பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.
தீபாவளித் திருநாளின் ஆன்மீக மற்றும் சமய முக்கியத்துவத்தை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த விசேட வழிபாட்டில், இறைவனின் அருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
தீபாவளி என்பது இருளை அகற்றி ஒளியை ஏற்றும் நன்னாளாகவும், தீமையை வென்று நன்மை நிலைநாட்டப்படுவதைக் குறிக்கும் பண்டிகையாகவும் இந்து மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு ஆலயத்தில் விசேட யாக பூஜை அபிஸேக பூஜைகள் நடைபெற்றதுடன் பூஜை வழிபாடுகள், பக்தர்களுக்கு ஆன்மீக மகிழ்ச்சியையும் மன அமைதியையும் அளிக்கும் வகையில் அமைந்தன.
தீபத்திருநாளை முன்னிட்டு மக்கள் தமது குடும்பங்களின் நலன், ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நாட்டின் சுபீட்சம் வேண்டி இறைவனைப் பிரார்த்தித்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற இந்தச் சிறப்பு பூஜை வழிபாடுகள் தீபாவளித் திருநாளின் ஆன்மீகச் சிறப்பை மேலும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தன.















