இலங்கைக்கு இரசாயன உரங்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் ஒன்று, ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து பாதுகாப்பாகப் பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
ஈரானிய கடற்படையின் உத்தியோகபூர்வ அனுமதியைத் தொடர்ந்து, குறித்த கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து தற்போது இலங்கையை நோக்கிப் பயணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
குறித்த கடல் வழிப்பாதையை மீண்டும் திறப்பதற்காக அமெரிக்கா கடந்த சில மாதங்களாக முன்னெடுத்த முயற்சிகள் வெற்றியளிக்காத நிலையில், ஈரான் தனது கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.
மேலும், ஈரானின் உத்தியோகபூர்வ அனுமதியின்றி குறித்த கடல் வழியாகப் பயணிக்க முயற்சிக்கும் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், இலங்கைக்கு உரம் ஏற்றி வந்த கப்பலுக்கு ஈரான் பாதுகாப்பான பயண அனுமதி வழங்கியுள்ளமை முக்கியத்துவம் பெற்றுள்ளது.







