சூரன்போரினை முன்னிட்டு பொலன்னறுவை மாவட்டம், மன்னம்பிட்டி தம்பன்கடவை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தில் சூரசம்ஹார நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான நிர்வாக சபையினரின் வேண்டுகோளுக்கிணங்க, பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகை சமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் தலைமையிலான வேட்டைத்திருவிழா வேட்டைக்குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சூரசம்ஹார நிகழ்வை சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.
இதன்போது பாரம்பரிய சமய மரபுகளுக்கு அமைய நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருளைப் பெற்றனர்.
இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் உள்ளிட்ட வேட்டைக்குழுவினர் அனைவருக்கும் ஸ்ரீ சித்திரவேலாயுதர் தேவஸ்தான நிர்வாகத்தினர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.







