Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2027ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாது என்பது எங்களுக்கும் தெரியும்; NPP எம்.பி

2027ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாது என்பது எங்களுக்கும் தெரியும்; NPP எம்.பி

21 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் இளம் விளையாட்டு வீரர்களை எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயார்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கத்தின் நீண்டகால விளையாட்டு அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், 2027ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாது என்பது அரசாங்கத்துக்கும் தெரியும் எனக் குறிப்பிட்டார்.

“2027ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாது என்பது எமக்கும் தெரியும். அது அனைவருக்கும் தெரிந்த விடயம்தான்” என அவர் மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

இந்தத் திட்டம் குறுகிய கால நோக்கத்தைக் கொண்டதல்ல என்றும், குறைந்தபட்சம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இளம் விளையாட்டு வீரர்களை முறையாகப் பயிற்றுவித்து, எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்லக்கூடிய வகையில் அவர்களைத் தயார்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்போது இலங்கை வீரர்கள் சிறந்த முறையில் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தும் கட்டமைக்கப்பட்ட விளையாட்டு அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு எனத் தெரிவித்தார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்த முன்மொழிவைத் தொடர்ந்து இந்த விவாதம் எழுந்துள்ளது.

இதன்படி, ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் இலங்கை வீரர்களுக்கு 100 மில்லியன் ரூபா பரிசுத் தொகை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு 75 மில்லியன் ரூபாவும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 மில்லியன் ரூபாவும், சார்க் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு 15 மில்லியன் ரூபாவும் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு!
செய்திகள்

மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு!

November 16, 2026
மாத்தளை மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது!
செய்திகள்

மாத்தளை மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது!

November 16, 2026
அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவு நவம்பர் 27 முதல் ஆரம்பம்!
செய்திகள்

அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவு நவம்பர் 27 முதல் ஆரம்பம்!

November 16, 2026
ஸ்ரீலங்கன் விமான சேவையை மீட்டெடுக்க விசேட திட்டம்; 2029ஆம் ஆண்டுக்குள் 29 விமானங்களாக அதிகரிக்க இலக்கு!
செய்திகள்

ஸ்ரீலங்கன் விமான சேவையை மீட்டெடுக்க விசேட திட்டம்; 2029ஆம் ஆண்டுக்குள் 29 விமானங்களாக அதிகரிக்க இலக்கு!

November 16, 2026
நாமல் ராஜபக்சவின் கிரிஷ் வழக்கு; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்சவின் கிரிஷ் வழக்கு; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!

November 16, 2026
ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்!
உலக செய்திகள்

ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்!

November 16, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு