மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இரண்டு பிள்ளைகளுடன் ஆபத்தான முடிவெடுக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (23) மாலை சுமார் 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரின் மனைவிக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறிய நிறுவனம் ஒன்று, முறைகேடான ஆவணங்களைத் தயாரித்து அவரை ஓமானுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இரண்டு பிள்ளைகளையும் தனியாகப் பராமரிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக குறித்த குடும்பஸ்தர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கல்லடிப் பாலத்தில் இடம்பெற்ற சம்பவத்தின்போது அப்பகுதி மக்களின் துரித நடவடிக்கையால் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








