Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு கட்டுப்பாடு; அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம்!

சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு கட்டுப்பாடு; அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம்!

23 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கூரை மீது சூரிய மின்சக்திப் படலங்களைப் பொருத்தும் திட்டத்தை முடக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக, அடுத்த ஆண்டு முதல் நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக எரிசக்தித் திட்டமிடலாளர் அசோக அபேகுணவர்தன எச்சரித்துள்ளார்.

சூரிய மின்சக்தி தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தற்போது காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய நடைமுறையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கூரை மீது சூரிய மின்சக்திப் படலங்களைப் பொருத்தும் நடவடிக்கைகள், இலங்கை மின்சார சபை எதிர்பார்த்ததை விட வேகமாக அதிகரித்து வருவதாகவும், இதனால் பகல் வேளைகளில் அதிகளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பகல் வேளையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து வைத்து இரவு வேளைகளில் பயன்படுத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மின்சார சபை இதுவரை போதியளவில் ஏற்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் சூரிய மின்சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை முழுமையாகப் பெற்றுக்கொள்வதில் மின்சார சபை சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்த நிலைமைக்குத் தீர்வு காணப்படாவிட்டால், அடுத்த ஆண்டு முதல் வறட்சியான காலப்பகுதிகளான பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மாற்றாக, அதிக செலவுமிக்க எரிபொருள் மின்நிலையங்கள் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும். இதனால் மின்சார உற்பத்திச் செலவு அதிகரிப்பதுடன், நுகர்வோருக்கான மின்சாரக் கட்டணங்களும் சடுதியாக உயரக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களிடமிருந்து தொடர்ந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்யும் அதேவேளை, உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சேமிப்பதற்கான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக முன்மொழியப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் ஒன்றான ‘Zero Export’ முறையின் கீழ் மின்சார சபைக்கு மேலதிக மின்சாரத்தை விற்பனை செய்ய முடியாது எனவும் அவர் விளக்கியுள்ளார்.

இந்த நடைமுறைக்கு மாறும்போது, முன்னர் மின்சார சபையின் மின்கட்டமைப்பை மின்சாரச் சேமிப்பகமாகப் பயன்படுத்திய வசதி இல்லாமல் போவதுடன், சூரிய மின்சக்திப் படலங்களைப் பொருத்துவதற்கு மேலதிகமாக மின்கலங்களையும் (Battery) கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அசோக அபேகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மூடநம்பிக்கை மற்றும் சாதி அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் தொடர்பில் அரசு அவதானம்
செய்திகள்

மூடநம்பிக்கை மற்றும் சாதி அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் தொடர்பில் அரசு அவதானம்

November 25, 2026
மக்களின் நெருக்கடிகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஐ.நா
செய்திகள்

மக்களின் நெருக்கடிகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஐ.நா

November 25, 2026
மக்களின் வரிப்பணம் மீண்டும் மக்களுக்கே சலுகைகளாக வழங்கப்படும்; பிரதி அமைச்சர்!
செய்திகள்

மக்களின் வரிப்பணம் மீண்டும் மக்களுக்கே சலுகைகளாக வழங்கப்படும்; பிரதி அமைச்சர்!

November 25, 2026
முன்பதிவு இல்லாவிட்டாலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்!
செய்திகள்

முன்பதிவு இல்லாவிட்டாலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்!

November 25, 2026
LTTE இயக்கத்தை மீளுருவாக்க சதி; மொஹமட் அஸ்மினுக்கு கேரள உயர்நீதிமன்றம் பிணை
செய்திகள்

LTTE இயக்கத்தை மீளுருவாக்க சதி; மொஹமட் அஸ்மினுக்கு கேரள உயர்நீதிமன்றம் பிணை

November 25, 2026
தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்!
செய்திகள்

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்!

November 24, 2026
Next Post
மக்களின் நெருக்கடிகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஐ.நா

மக்களின் நெருக்கடிகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஐ.நா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு