Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மூடநம்பிக்கை மற்றும் சாதி அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் தொடர்பில் அரசு அவதானம்

மூடநம்பிக்கை மற்றும் சாதி அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் தொடர்பில் அரசு அவதானம்

1 day ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் மூடநம்பிக்கை விளம்பரங்கள், சமூகத்தைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் உள்ளடக்கங்கள் மற்றும் வன்முறையை ஆளுமையாகச் சித்தரிக்கும் போக்குகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய ஊடக ஒழுக்கக் கோவை (Media Code of Ethics) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களைத் தவறான வழியில் இட்டுச் செல்லும் வகையில் மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட விளம்பரங்கள் அதிகரித்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, வசியம் செய்வது தொடர்பான விளம்பரங்கள் மாத்திரமன்றி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருவரின் தோற்றம் அல்லது வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனக் கூறும் ஆதாரமற்ற விளம்பரங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சாதி அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் உள்ளிட்ட சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வன்முறையை வீரமாகவும் ஆளுமையாகவும் சித்தரிக்கும் திரைப்படங்கள், கதைகள், நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் இலக்கியப் படைப்புகள் சமூகத்தின் மனநிலையில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வன்முறையைக் கைவிடுவதே உண்மையான வீரம் மற்றும் ஆளுமை என வலியுறுத்திய அவர், ஆண்மை மற்றும் பெண்மை தொடர்பான இறுக்கமான, தவறான கருத்துகளும் சமூகத்தில் ஆழமாகப் பதிய வைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சிறுவர்கள் மத்தியில் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாடசாலைக் கல்வி முறைமை ஊடாக விஞ்ஞானபூர்வமான புரிதலை உருவாக்குவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரத்துறை, கலை, ஊடகம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் வகையில் இந்தப் புதிய ஊடக ஒழுக்கக் கோவையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

விளையாட்டு மைதானத்தில் சடலம் மீட்பு; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம்!
செய்திகள்

விளையாட்டு மைதானத்தில் சடலம் மீட்பு; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம்!

November 26, 2026
யாழில் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்ட அனுமதியற்ற கட்டுமானம்!
செய்திகள்

யாழில் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்ட அனுமதியற்ற கட்டுமானம்!

November 26, 2026
கெப் வாகனத்திலிருந்து விழுந்த 13 வயது சிறுமி பலி; நோர்வுட்டில் சோகம்!
செய்திகள்

கெப் வாகனத்திலிருந்து விழுந்த 13 வயது சிறுமி பலி; நோர்வுட்டில் சோகம்!

November 26, 2026
இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!

November 26, 2026
வவுணதீவில் கோபு வாள்வெட்டுக் குழுவுக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம்!
காணொளிகள்

வவுணதீவில் கோபு வாள்வெட்டுக் குழுவுக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம்!

November 26, 2026
இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV!
செய்திகள்

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV!

November 26, 2026
Next Post
கல்முனை கல்வி வலயத்தில் மாணவர்களுக்கான போசாக்கு உணவுத் திட்டத்தில் குறைபாடு என்ற செய்தி தவறானது; வலயக் கல்விப் பணிப்பாளர்!

கல்முனை கல்வி வலயத்தில் மாணவர்களுக்கான போசாக்கு உணவுத் திட்டத்தில் குறைபாடு என்ற செய்தி தவறானது; வலயக் கல்விப் பணிப்பாளர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.