காலி மாவட்டத்தின் ரத்கம – மாலிதூவ பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானமொன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், உயிரிழப்புக்கான காரணம் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், உயிரிழந்த நபர் தொடர்பான அடையாள விபரங்கள் மற்றும் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னணி தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








