Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டுபாயில் தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

டுபாயில் தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

9 minutes ago
in செய்திகள்

கொழும்பு, கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியபோது, தனது கடமைக்காக வழங்கப்பட்ட ரி-56 ரக துப்பாக்கியைத் திருடி திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல் உறுப்பினர்களிடம் வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஜயக்கொடி ஆரச்சிகே கவிந்து ஆகாஷ் ஜயக்கொடி என அடையாளம் காணப்பட்ட குறித்த சந்தேகநபர், சம்பவத்தையடுத்து டுபாய்க்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்றும் டுபாய்க்குச் சென்று அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

இதன் பின்னர், இன்று (26) அதிகாலை 5.20 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-226 விமானம் மூலம் சந்தேகநபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

26 வயதுடைய குறித்த சந்தேகநபர் அநுராதபுரம், பேமடுவ ஹெலம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை வந்தடைந்த அவரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து, வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

விளையாட்டு மைதானத்தில் சடலம் மீட்பு; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம்!
செய்திகள்

விளையாட்டு மைதானத்தில் சடலம் மீட்பு; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம்!

November 26, 2026
யாழில் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்ட அனுமதியற்ற கட்டுமானம்!
செய்திகள்

யாழில் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்ட அனுமதியற்ற கட்டுமானம்!

November 26, 2026
கெப் வாகனத்திலிருந்து விழுந்த 13 வயது சிறுமி பலி; நோர்வுட்டில் சோகம்!
செய்திகள்

கெப் வாகனத்திலிருந்து விழுந்த 13 வயது சிறுமி பலி; நோர்வுட்டில் சோகம்!

November 26, 2026
இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!

November 26, 2026
வவுணதீவில் கோபு வாள்வெட்டுக் குழுவுக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம்!
காணொளிகள்

வவுணதீவில் கோபு வாள்வெட்டுக் குழுவுக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம்!

November 26, 2026
இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV!
செய்திகள்

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV!

November 26, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.