Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரானில் 2 மாத கர்ப்பிணியான 19 வயது மகளை கொன்ற பெற்றோர் கைது

ஈரானில் 2 மாத கர்ப்பிணியான 19 வயது மகளை கொன்ற பெற்றோர் கைது

15 minutes ago
in செய்திகள்

ஈரானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சனந்தாஜ் நகரில், இரண்டு மாத கர்ப்பிணியான 19 வயது இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹெலியா பத்தாஹி (19) என்ற இளம் பெண், இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

தனது கர்ப்பம் குறித்த தகவலை கடந்த வாரம் குடும்பத்தினரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோரான வோரியா பத்தாஹி மற்றும் லைலா வெய்ஸ் ஆகியோர், மகளுக்கு எதிராக முறைப்பாடு அளிப்பதற்காக கடந்த 21ஆம் திகதி நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து வீடு திரும்பிய பெற்றோர், மகளைத் தாக்கியதுடன், சுமார் 30 வலிப்பு எதிர்ப்பு மாத்திரைகளை வலுக்கட்டாயமாக உட்கொள்ளச் செய்து கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

எனினும், மாத்திரைகளை உட்கொண்ட பின்னரும் அவர் உயிருடன் இருந்ததாகவும், இதனைத் தொடர்ந்து தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து கொலை செய்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து பெற்றோர் இருவரையும் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசாரணைகளின்போது, மகளைக் கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்தச் சம்பவத்தை ஆணவக் கொலையாக ஹெங்காவ் மற்றும் ஹானா ஆகிய மனித உரிமை அமைப்புகள் அடையாளப்படுத்தியுள்ளன.

ஹெலியா பத்தாஹியின் மரணம் ஈரானில் பெண்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள் மற்றும் பெண்களின் உரிமைகள் தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும், ஒரு வார காலப்பகுதிக்குள் ஈரானில் இளம் பெண் ஒருவர் கொல்லப்படும் மூன்றாவது சம்பவம் இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எதிர்வரும் 30ம் திகதி முடங்கப்போகும் அரச பாடசாலைகள்
செய்திகள்

எதிர்வரும் 30ம் திகதி முடங்கப்போகும் அரச பாடசாலைகள்

November 26, 2026
யாழில் கணவனை திருவலைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை!
செய்திகள்

யாழில் கணவனை திருவலைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை!

November 26, 2026
டுபாயில் தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
செய்திகள்

டுபாயில் தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

November 26, 2026
விளையாட்டு மைதானத்தில் சடலம் மீட்பு; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம்!
செய்திகள்

விளையாட்டு மைதானத்தில் சடலம் மீட்பு; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம்!

November 26, 2026
யாழில் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்ட அனுமதியற்ற கட்டுமானம்!
செய்திகள்

யாழில் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்ட அனுமதியற்ற கட்டுமானம்!

November 26, 2026
கெப் வாகனத்திலிருந்து விழுந்த 13 வயது சிறுமி பலி; நோர்வுட்டில் சோகம்!
செய்திகள்

கெப் வாகனத்திலிருந்து விழுந்த 13 வயது சிறுமி பலி; நோர்வுட்டில் சோகம்!

November 26, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு