Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இத்தாலியிலிருந்து விடுமுறைக்கு வந்தவருக்கு அதிர்ச்சி; 40.75 இலட்சம் ரூபா தங்க நகைகள் திருட்டு – யுவதி கைது!

இத்தாலியிலிருந்து விடுமுறைக்கு வந்தவருக்கு அதிர்ச்சி; 40.75 இலட்சம் ரூபா தங்க நகைகள் திருட்டு – யுவதி கைது!

17 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

விடுமுறைக்காக இத்தாலியிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவரிடம் இருந்து சுமார் 40 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் பதக்கத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 26 வயதுடைய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வென்னப்புவ பகுதியில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், தனது குடும்பத்தினருடன் இத்தாலியில் வசித்து வரும் நிலையில், அண்மையில் விடுமுறைக்காக இலங்கை திரும்பியுள்ளார். இதன்போது ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் கலந்துகொண்ட அவர், அங்கு வைத்து 26 வயதுடைய யுவதியொருவருடன் அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் இருவருக்கும் இடையிலான பழக்கம் நெருக்கமாக மாறியதையடுத்து, கடந்த மாதம் 15ஆம் திகதி வென்னப்புவ பகுதியில் உள்ள தங்குமிடமொன்றில் இருவரும் அறையொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

இதன்போது, குறித்த நபர் தனது 40 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் பதக்கத்தைக் கழற்றி காற்சட்டைப் பையில் வைத்துவிட்டு குளியலறைக்குச் சென்றுள்ளார்.

மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது, அறையில் இருந்த யுவதியைக் காணவில்லை. தங்குமிடப் பணியாளர்களிடம் விசாரித்தபோது, அவர் அவசரமாக வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தனது காற்சட்டைப் பையைப் பரிசோதித்தபோது, அதற்குள் வைத்திருந்த தங்க நகைகள் காணாமல் போயிருந்தமை தெரியவந்துள்ளது.

யுவதியின் தொலைபேசிக்கு பலமுறை அழைப்புகளை மேற்கொண்ட போதிலும் பதில் கிடைக்காத நிலையில், பாதிக்கப்பட்ட நபர் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், நீர்கொழும்பு – கட்டான பகுதியில் உள்ள தங்குமிடமொன்றில் தங்கியிருந்த 26 வயதுடைய சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

வென்னப்புவ – பண்டிரிப்புவ பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி, தற்போது மாரவில – வடிய பகுதியில் தற்காலிகமாக வசித்து வருபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், திருடப்பட்டதாகக் கூறப்படும் தங்கச் சங்கிலி மற்றும் பதக்கத்தை அடகு நிலையமொன்றில் அடகு வைத்துள்ளதாக சந்தேகநபர் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது வாக்குமூலம் வழங்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் பெரேரா மற்றும் வென்னப்புவ உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அசல புல்வன்சா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வென்னப்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் என்.ஜே. அதுகோரள மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஷேஷன் உள்ளிட்ட குழுவினர் திருடப்பட்ட நகைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

விடுமுறைக்காகத் தாயகம் திரும்பிய நபர் ஒருவருக்கு நேர்ந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெருகல் பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 10 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!
அரசியல்

வெருகல் பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 10 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

November 27, 2026
பேலியகொடையில் 18 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

பேலியகொடையில் 18 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருள் மீட்பு!

November 27, 2026
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வாவியில் புதிய பாலம்; 2027இல் பணிகளை நிறைவு செய்யத் திட்டம்
செய்திகள்

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வாவியில் புதிய பாலம்; 2027இல் பணிகளை நிறைவு செய்யத் திட்டம்

November 27, 2026
சர்வதேச விருதுகளை வென்ற ‘மழைக்கால இரவுகள்’ குறுந்திரைப்படம் YouTube தளத்தில் வெளியீடு!
காணொளிகள்

சர்வதேச விருதுகளை வென்ற ‘மழைக்கால இரவுகள்’ குறுந்திரைப்படம் YouTube தளத்தில் வெளியீடு!

November 27, 2026
இலங்கையில் பக்கவாத நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
செய்திகள்

இலங்கையில் பக்கவாத நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

November 27, 2026
வயல்கள் முழுவதும் நெல் பயிரிட்டால் நெருக்கடி ஏற்படும் என்கிறார் அமைச்சர் லால்காந்த
செய்திகள்

வயல்கள் முழுவதும் நெல் பயிரிட்டால் நெருக்கடி ஏற்படும் என்கிறார் அமைச்சர் லால்காந்த

November 27, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.