Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை அரச சேவையிலிருந்து ஒரே ஆண்டில் 23,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

இலங்கை அரச சேவையிலிருந்து ஒரே ஆண்டில் 23,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

14 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் அரச சேவையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டு காலப்பகுதியில் 23,000க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கான ஆளணி அறிக்கைகளின்படி, 2026 ஜூன் 30ஆம் திகதியன்று அரச சேவையில் மொத்தம் 893,797 ஊழியர்கள் பணியாற்றியுள்ளனர்.

எனினும், இதற்கு முந்தைய ஆண்டில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 917,137 ஆகப் பதிவாகியிருந்தது. இதன்படி, ஒரே ஆண்டில் 23,340 ஊழியர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

இதன் விளைவாக, அரச சேவையில் நிரப்பப்படாத வெற்றிடங்களின் எண்ணிக்கை 36,391 ஆல் அதிகரித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரச பதவிகளில் நிரப்பப்பட்டுள்ள பதவிகளின் விகிதமும் 82 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மறுபுறம், அரச சேவையில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், அவர்களுக்கான சம்பளம் மற்றும் வேதனங்களுக்குச் செலவிடப்படும் அரச நிதி தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

மாகாண சபை ஊழியர்களையும் உள்ளடக்கிய அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் வேதனங்களுக்காக 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 827 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் செலவிடப்பட்ட 760.7 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் 8.7 சதவீத அதிகரிப்பாகும்.

ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட அரச துறைச் சம்பளத் திருத்தத்தின் இரண்டாம் கட்டமே இந்தச் செலவு அதிகரிப்புக்கான பிரதான காரணமாக அமைந்துள்ளதாக திறைசேரி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பான விபரங்கள் திறைசேரியின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பொருளாதார மற்றும் அரச நிதி நிலைமை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன்படி, அரச சேவையில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் அதேவேளை, சம்பளத்திற்கான அரச செலவினம் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்க விடயமாக அமைந்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கை ரூபாயில் கடன் வழங்க தயாரிக்கிறது உலக வங்கி
செய்திகள்

இலங்கை ரூபாயில் கடன் வழங்க தயாரிக்கிறது உலக வங்கி

November 27, 2026
அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவி விலகினார் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர்!
செய்திகள்

அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவி விலகினார் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர்!

November 27, 2026
மின்சார மோட்டார் சைக்கிள்களைப் பெற 65,000 பொலிஸ் அதிகாரிகள் விண்ணப்பம்!
செய்திகள்

மின்சார மோட்டார் சைக்கிள்களைப் பெற 65,000 பொலிஸ் அதிகாரிகள் விண்ணப்பம்!

November 27, 2026
இத்தாலியிலிருந்து விடுமுறைக்கு வந்தவருக்கு அதிர்ச்சி; 40.75 இலட்சம் ரூபா தங்க நகைகள் திருட்டு – யுவதி கைது!
செய்திகள்

இத்தாலியிலிருந்து விடுமுறைக்கு வந்தவருக்கு அதிர்ச்சி; 40.75 இலட்சம் ரூபா தங்க நகைகள் திருட்டு – யுவதி கைது!

November 27, 2026
வெருகல் பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 10 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!
அரசியல்

வெருகல் பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 10 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்!

November 27, 2026
பேலியகொடையில் 18 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

பேலியகொடையில் 18 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருள் மீட்பு!

November 27, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு