Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் மூன்றாவது இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!

இலங்கையில் மூன்றாவது இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!

22 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் 19 வயது இளைஞரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட இதயம், 14 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக மாற்றிப் பொருத்தப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த 19 வயது இளைஞரின் இதயத்தைப் பயன்படுத்தி, இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சையை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

இலங்கையில் வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது இதய மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் நிபுணர் வைத்தியர் அனில் அபேவிக்ரம தலைமையிலான மருத்துவக் குழுவினர், கடந்த 26ஆம் திகதி மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை ஏழு மணித்தியாலங்களுக்கும் மேலாக இந்த அறுவை சிகிச்சையை முன்னெடுத்துள்ளனர்.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது சிறுவன் தற்போது நல்ல உடல்நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், விபத்தில் சிக்கி கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயது இளைஞர் மூளைச்சாவடைந்த நிலையில், அவரது இதயத்தைத் தானமாக வழங்குவதற்கு குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த இதயத்தை கம்பஹா வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதயத்தை ஹெலிகொப்டர் மூலம் கொண்டு வருவதற்கு விமானப்படையினர் ஏற்பாடுகளைச் செய்திருந்த போதிலும், இறுதியில் விசேட பொலிஸ் பாதுகாப்புடன் வீதி மார்க்கமாக இதயம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளின் மூலம் 14 வயது சிறுவனுக்கு இதயத்தை வெற்றிகரமாகப் பொருத்தி மருத்துவக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பேருந்து மீது மலைப்பாறை சரிந்து கோர விபத்து – ஒருவர் பலி; பெண் படுகாயம்!
செய்திகள்

பேருந்து மீது மலைப்பாறை சரிந்து கோர விபத்து – ஒருவர் பலி; பெண் படுகாயம்!

November 28, 2026
அரசாங்கத்தின் அறிவுறுத்தலை மீறி இளங்குமரனின் மாவீரர் தின நினைவுப் பதிவு!
செய்திகள்

அரசாங்கத்தின் அறிவுறுத்தலை மீறி இளங்குமரனின் மாவீரர் தின நினைவுப் பதிவு!

November 28, 2026
22 மாதங்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ரூ 27,581 மில்லியன் சாதனை வருமானம்!
செய்திகள்

22 மாதங்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ரூ 27,581 மில்லியன் சாதனை வருமானம்!

November 28, 2026
குற்றங்களை ஒழிப்பது மட்டுமல்ல, மக்களின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும்; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

குற்றங்களை ஒழிப்பது மட்டுமல்ல, மக்களின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும்; ஜனாதிபதி அநுர!

November 28, 2026
கற்பிட்டியில் 827 கிலோகிராம் பீடி இலைகள் மீட்பு; ஒருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் 827 கிலோகிராம் பீடி இலைகள் மீட்பு; ஒருவர் கைது!

November 28, 2026
வேனை கடத்திச் சென்ற கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

வேனை கடத்திச் சென்ற கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

November 28, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு