எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நாட்டின் அனைத்து ரயில் சேவைகளும் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள திணைக்களம், அன்றைய தினம் ரயில் போக்குவரத்தில் எவ்வித தடையும் இருக்காது எனத் தெரிவித்துள்ளது.
வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக போதியளவு கொடுப்பனவு அதிகரிப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி, எதிர்வரும் 30ஆம் திகதி பல தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையிலேயே, அன்றைய தினம் அனைத்து ரயில்களும் வழமை போன்று சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.








