மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் “அமுத விழா நடைபவனி” நேற்று (28.11.2026) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு பாடசாலை வளாகத்தில் வெகு விமர்சையாகவும் கோலாகலமாகவும் ஆரம்பமாகி நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி. சு. ஜெயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பட்டிருப்பு வலயக்கல்விப் பிரதி பணிப்பாளர் பிரபாரகன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பாடசாலையின் பழைய மாணவருமான கோவிந்தன் கருணாகரம் உட்பட பலர் கலந்தகொண்டனர்.
காலை அதிதிகள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கான வரவேற்புடன் ஆரம்பமான இந்நிகழ்வில், தேசிய மற்றும் பாடசாலைக் கொடியேற்றல், மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம் ஆகியன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் வரவேற்பு நடனம் நிகழ்விற்கு மெருகூட்டியது.






































தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகளில், ஆசியுரை, அதிபர் திருமதி. சு. ஜெயகுமார் அவர்களின் தலைமையுரை மற்றும் பிரதம அதிதி; அவர்களின் சிறப்புரை என்பன இடம்பெற்றன.
இவ்விழாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக “அமுத விழா நினைவுப்பலகை” அதிதியினால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 80ஆவது அமுத விழா ஊர்தி ஊர்வலம் மற்றும் நடைபவனி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டர்.
இதன்போது நடைபவனியின் பங்குகொண்ட வாகனங்கள் அனைத்திலும் விழிப்புணர்வினை ஊட்டும் வகையிலான பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன.







